கைம்மாறு வேண்டா கடப்பாடு
மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு
டென்னாற்றுங் கொல்லோ உலகு
மு.வ உரை:
இந்த உலகத்தார் மழைக்கு
என்ன கைமாறு செய்கின்றனர்;,
மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப்
பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர்
செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு
இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்?
கலைஞர் உரை:
கைம்மாறு கருதி மழை
பொழிவதில்லை;
அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள்
அல்லர்
குறள் 212:
தாளாற்றித் தந்த
பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு
வேளாண்மை செய்தற் பொருட்டு
மு.வ உரை:
ஒப்புரவாளன் தன்னால் இயன்ற
முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
முயன்று சம்பாதித்த பொருள்
எல்லாம்,
உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.
கலைஞர் உரை:
தகுதியுடையோர் நலனுக்கு
உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்
குறள் 213:
புத்தே ளுலகத்தும் ஈண்டும்
பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற
ஒப்புரவின் நல்ல பிற
மு.வ உரை:
பிறர்க்கு உதவி செய்து
வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும்
இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.
சாலமன் பாப்பையா உரை:
தேவர்கள் உலகத்திலும்
இப்பூவுலகிலும்,
உழைக்க முடியாதவர்க்கு உதவுவது போன்ற வேறு நல்ல செயல்களைப் பெறுவது
கடினம்.
கலைஞர் உரை:
பிறர்க்கு உதவிடும்
பண்பாகிய ``ஒப்புரவு'' என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய
உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது
குறள் 214:
ஒத்த தறிவான்
உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்
செத்தாருள் வைக்கப் படும்
மு.வ உரை:
ஒப்புரவை அறிந்து போற்றிப்
பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன்
செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை:
உழைக்கும் சக்தி
அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே
எண்ணப்படுவான்.
கலைஞர் உரை:
ஒப்புரவை அறிந்து பிறருக்கு
உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு
மாறானவன் இறந்தவனே ஆவான்
குறள் 215:
ஊருணி நீர்நிறைந் தற்றே
உலகவாம்
பேரறி வாளன் திரு
பேரறி வாளன் திரு
மு.வ உரை:
ஒப்புரவினால் உலகம்
வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம்
நீரால் நிறைந்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
உலகின் வளர்ச்சிப் போக்கை
அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி
எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.
கலைஞர் உரை:
பொதுநல நோக்குடன்
வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர்
நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்
குறள் 216:
பயன்மரம் உள்ளூர்ப்
பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்
நயனுடை யான்கண் படின்
மு.வ உரை:
ஒப்புராவாகிய நற்பண்பு
உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள்
பழுத்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
பிறரால்
விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும்
பொதுவாகும்.
கலைஞர் உரை:
ஈர நெஞ்சம் கொண்டவனிடம்
செல்வம் சேருமேயானால் அது,
ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக்
குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்
குறள் 217:
மருந்தாகித் தப்பா
மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்
பெருந்தகை யான்கண் படின்
மு.வ உரை:
ஒப்புரவாகிய பெருந்தகைமை
உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப்
பயன்படத் தவறாத மரம் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
பெரும் பண்பாளனிடம் சேரும்
செல்வம்,
எல்லா உறுப்புகளாலும் மருந்து ஆகிப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரம்
போலப் பொதுவாகும்.
கலைஞர் உரை:
பிறருக்கு உதவிடும்
பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம், செல்வம் சேர்ந்தால் அது ஒரு
நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்
குறள் 218:
இடனில் பருவத்தும்
ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்
கடனறி காட்சி யவர்
மு.வ உரை:
ஒப்புரவு அறிந்து
ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத
காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
செய்யவேண்டிய கடமையை
அறிந்த அறிவாளிகள்,
தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும்
சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்.
கலைஞர் உரை:
தம்மிடம் வளம் நீங்கி, வறுமை
வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில்
தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்
குறள் 219:
நயனுடையான் நல்கூர்ந்தா
னாதல் செயும்நீர
செய்யா தமைகலா வாறு
செய்யா தமைகலா வாறு
மு.வ உரை:
ஒப்புரவாகிய நற்பண்பு
உடையவன் வறுமை உடையவனாதல்,
செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
உழைக்கும் சக்தி
அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப்
பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.
கலைஞர் உரை:
பிறர்க்கு உதவி செய்வதையே
கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான்
என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும்
நிலைமைதான்
குறள் 220:
ஒப்புரவி னால்வருங்
கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து
விற்றுக்கோள் தக்க துடைத்து
மு.வ உரை:
ஒப்புரவால் கேடு வரும்
என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
இருப்பதைப் பிறர்க்குக்
கொடுத்துவிட்டால்,
நாளை நமக்குத் தீமை வருமே என்று சொன்னால், தன்னையே
விலையாகக் கொடுத்து அந்தத் தீமை வாங்கத்தக்கதே.
கலைஞர் உரை:
பிறருக்கு உதவுகின்ற
சிறப்புடைய உலக ஒழுக்கம்,
கேடு விளைவிக்கக் கூடியதாக இருப்பின், அக்கேடு,
ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும்
0 Comments