பல்லார் முனியப் பயனில
சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்
எல்லாரும் எள்ளப் படும்
மு.வ உரை:
கேட்டவர் பலரும்
வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும்
இகழப்படுவான்
சாலமன் பாப்பையா உரை:
பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற
சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.
கலைஞர் உரை:
பலரும் வெறுக்கும்படியான
பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்
குறள் 192:
பயனில பல்லார்முன் சொல்லல்
நயனில
நட்டார்கட் செய்தலிற் றீது
நட்டார்கட் செய்தலிற் றீது
மு.வ உரை:
பலர் முன்னே பயனில்லாத
சொற்களைச் சொல்லுதல்,
நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் பலருக்கும் முன்னே
பயனற்ற சொற்களைச் சொல்வது,
நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.
கலைஞர் உரை:
பலர்முன் பயனில்லாத
சொற்களைக் கூறுவது,
நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்
குறள் 193:
நயனில னென்பது சொல்லும்
பயனில
பாரித் துரைக்கும் உரை
பாரித் துரைக்கும் உரை
மு.வ உரை:
ஒருவன் பயனில்லா
பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை
அறிவிக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
பயனற்ற சொற்களை விரித்துப்
பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.
கலைஞர் உரை:
பயனற்றவைகளைப்பற்றி ஒருவன்
விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்
குறள் 194:
நயன்சாரா நன்மையின்
நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து
பண்பில்சொல் பல்லா ரகத்து
மு.வ உரை:
பயனோடு பொருந்தாத பண்பு
இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல்
நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.
சாலமன் பாப்பையா உரை:
பயனற்ற, பண்பும்
இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல்
நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.
கலைஞர் உரை:
பயனற்றதும், பண்பற்றதுமான
சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை
மாய்க்கும்
குறள் 195:
சீர்மை சிறப்பொடு நீங்கும்
பயனில
நீர்மை யுடையார் சொலின்
நீர்மை யுடையார் சொலின்
மு.வ உரை:
பயனில்லாத சொற்களை நல்ல
பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு
நீங்கிவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
இனிய குணத்தவர் பயனற்ற
சொற்களைச் சொன்னால்,
அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே
நீங்கிவிடும்.
கலைஞர் உரை:
நல்ல பண்புடையவர்
பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி
விடும்
குறள் 196:
பயனில்சொல் பாராட்டு வானை
மகனெனல்
மக்கட் பதடி யெனல்
மக்கட் பதடி யெனல்
மு.வ உரை:
பயனில்லாத சொற்களைப்
பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள்
பதர் என்று சொல்லவேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
பயனற்ற சொற்களையே
பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே
சொல்லுங்கள்.
கலைஞர் உரை:
பயனற்றவைகளைச் சொல்லிப்
பயன்பெற நினைப்பவனை,
மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்
குறள் 197:
நயனில சொல்லினுஞ் சொல்லுக
சான்றோர்
பயனில சொல்லாமை நன்று
பயனில சொல்லாமை நன்று
மு.வ உரை:
அறம் இல்லாதவற்றைச்
சொன்னாலும் சொல்லலாம்,
சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நீதியற்ற சொற்களைச்
சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது.
கலைஞர் உரை:
பண்பாளர்கள், இனிமையல்லாத
சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச்
சொல்லாமல் இருப்பதே நல்லது
குறள் 198:
அரும்பய னாயும் அறிவினார்
சொல்லார்
பெரும்பய னில்லாத சொல்
பெரும்பய னில்லாத சொல்
மு.வ உரை:
அருமையான பயன்களை ஆராயவல்ல
அறிவை உடைய அறிஞர்,
மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்
சாலமன் பாப்பையா உரை:
அரிய பயன்களை ஆராயும்
அறிவுடையோர்,
பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.
கலைஞர் உரை:
அரும்பயன்களை ஆராய்ந்து
அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும்
பயன்படுத்த மாட்டார்
குறள் 199:
பொருள்தீர்ந்த
பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்
மாசறு காட்சி யவர்
மு.வ உரை:
மயக்கத்திலிருந்து தெளிந்த
மாசற்ற அறிவை உடையவர்,
பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
மயக்கமற்ற தூய அறிவினை
உடையவர்,
பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.
கலைஞர் உரை:
மயக்கம் சிறிதுமில்லாத
மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்
குறள் 200:
சொல்லுக சொல்லிற் பயனுடைய
சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்
சொல்லிற் பயனிலாச் சொல்
மு.வ உரை:
சொற்களில் பயன் உடைய
சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே
கூடாது.
சாலமன் பாப்பையா உரை:
சொற்களில் அறம், பொருள்,
இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற
சொற்களைச் சொல்லவேண்டா.
கலைஞர் உரை:
பயனளிக்காத சொற்களை
விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்
0 Comments