நடுவின்றி நன்பொருள்
வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்
குற்றமும் ஆங்கே தரும்
மு.வ உரை:
நடுவுநிலைமை இல்லாமல்
பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக்
குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்குரிய பொருளை
அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும்.
கலைஞர் உரை:
மனச்சான்றை
ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின்
குடியும் கெட்டொழிந்து,
பழியும் வந்து சேரும்
குறள் 172:
படுபயன் வெஃகிப் பழிப்படுவ
செய்யார்
நடுவன்மை நாணு பவர்
நடுவன்மை நாணு பவர்
மு.வ உரை:
நடுவுநிலைமை அல்லாதவற்றைக்
கண்டு நாணி ஒதுங்குகின்றவர்,
பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச்
செய்யார்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் பொருளைக் கவர்ந்து
அனுபவிக்க எண்ணிப் பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய
மாட்டார்.
கலைஞர் உரை:
நடுவுநிலை தவறுவது நாணித்
தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும்
செயலில் ஈடுபடமாட்டார்
குறள் 173:
சிற்றின்பம் வெஃகி யறனல்ல
செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்
மற்றின்பம் வேண்டு பவர்
மு.வ உரை:
அறநெறியால் பெறும்
இன்பத்தை விரும்புகின்றவர்,
நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.
சாலமன் பாப்பையா உரை:
அறத்தால் வரும் நிலையான
இன்பங்களை விரும்புவோர் நிலையில்லாத இன்பத்தை விரும்பிப் பிறர் பொருளைக் கவரும்
அறம் இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார்.
கலைஞர் உரை:
அறவழியில் நிலையான பயனை
விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார்
குறள் 174:
இலமென்று வெஃகுதல்
செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்
புன்மையில் காட்சி யவர்
மு.வ உரை:
ஐம்புலன்களையும் வென்ற
குற்றமில்லாத அறிவை உடையவர்,
யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்.
சாலமன் பாப்பையா உரை:
ஏதும் இல்லாத ஏழையாய்
இருக்கிறோமோ என எண்ணி,
ஐம்புலன் ஆசைகளையும் வென்ற பேர் அறிஞர், பிறர்
பொருளைக் கவரமாட்டார்.
கலைஞர் உரை:
புலனடக்கம் வாய்ந்த தூயவர், வறுமையில்
வாடும் நிலையிலேகூடப் பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்ப மாட்டார்
குறள் 175:
அஃகி யகன்ற அறிவென்னாம்
யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்
வெஃகி வெறிய செயின்
மு.வ உரை:
யாரிடத்திலும் பொருளைக்
கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய்
வளர்ந்த அறிவால் பயன் என்ன?
சாலமன் பாப்பையா உரை:
பிறர் பொருள் மீது, ஆசை
கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்று பரந்த அறிவினால் அவருக்கு ஆகும் பயன்தான் என்ன?
கலைஞர் உரை:
யாராயிருப்பினும் அவரது
உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும்
நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்?
குறள் 176:
அருள்வெஃகி யாற்றின்கண்
நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்
பொல்லாத சூழக் கெடும்
மு.வ உரை:
அருளை விரும்பி அறநெறியில்
நின்றவன்,
பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால்
கெடுவான்.
சாலமன் பாப்பையா உரை:
அருளை விரும்பிக் குடும்ப
வாழ்வில் இருப்பவன்,
பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுப் பொல்லாதது செய்தால், அவன் கெட்டுப் போவான்.
கலைஞர் உரை:
அருளை விரும்பி அதனை
அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத
செயலில் ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும்
குறள் 177:
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம்
விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்
மாண்டற் கரிதாம் பயன்
மு.வ உரை:
பிறர் பொருளைக் கவர
விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன்
விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் பொருளை அவர்
விரும்பாதிருக்க,
நாம் விரும்பிப் பெற்று அனுபவிக்கும்போது அதன் பயன் நல்லதாக இல்லை
என்று அறிவதால், பிறர் பொருளைக் கவர்வதற்கு விரும்ப வேண்டா.
கலைஞர் உரை:
பிறர் பொருளைக் கவர்ந்து
ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது
குறள் 178:
அஃகாமை செல்வத்திற்
கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்
வேண்டும் பிறன்கைப் பொருள்
மு.வ உரை:
ஒருவனுடைய செல்வத்திற்குக்
குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை
விரும்பாதிருத்தலாகும்.
சாலமன் பாப்பையா உரை:
செல்வம் குறையாமல் இருக்க
வழி என்ன என்றால்,
பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே.
கலைஞர் உரை:
தன்னுடைய செல்வச் செழிப்பு
குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று
ஆசைப்படாமலிருக்க வேண்டும்
குறள் 179:
அறனறிந்து வெஃகா
அறிவுடையார்ச் சேருந்
திறனறிந் தாங்கே திரு
திறனறிந் தாங்கே திரு
மு.வ உரை:
அறம் இஃது என்று அறிந்து
பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு
ஏற்றவாறு சேர்வாள்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் பொருளுக்கு
ஆசைப்படாதிருப்பதே அறம் என்னும் அறிவுடையோரின் பெருமையை அறிந்து, திருமகள்
தானே அவரிடம் போய் இருப்பாள்.
கலைஞர் உரை:
பிறர் பொருளைக் கவர
விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம்
சேரும்
குறள் 180:
இறலீனும் எண்ணாது வெஃகின்
விறலீனும்
வேண்டாமை யென்னுஞ் செருக்கு
வேண்டாமை யென்னுஞ் செருக்கு
மு.வ உரை:
விளைவை எண்ணாமல் பிறர்
பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல்
வாழும் பெருமை வெற்றியைத் தரும்.
சாலமன் பாப்பையா உரை:
பின் விளைவை எண்ணாமல்
அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக்
கொடுக்கும்; அதற்கு ஆசைப்படாத செல்வமோ வெற்றியைக்
கொடுக்கும்.
கலைஞர் உரை:
விளைவுகளைப் பற்றி
நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய
விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்
0 Comments