ஒழுக்காறாக் கொள்க
ஒருவன்தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு
தழுக்கா றிலாத இயல்பு
மு.வ உரை:
ஒருவன் தன் நெஞ்சில்
பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற
வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
உள்ளத்துள் பொறாமை
இல்லாமல் வாழும் குணத்தை,
ஒருவன் தனக்கு உரிய ஒழுக்கமாகக் கொள்க.
கலைஞர் உரை:
மனத்தில் பொறாமையில்லாமல்
வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்
குறள் 162:
விழுப்பேற்றின் அஃதொப்ப
தில்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்
அழுக்காற்றின் அன்மை பெறின்
மு.வ உரை:
யாரிடத்திலும் பொறாமை
இல்லாதிருக்கப் பெற்றால்,
ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும்
இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
எவர் இடத்தும் பொறாமை
கொள்ளாதிருப்பதை ஒருவன் பெற்றால் சீரிய சிறப்புகளுள் அது போன்றது வேறு இல்லை.
கலைஞர் உரை:
யாரிடமும் பொறாமை கொள்ளாத
பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு
எதுவுமில்லை
குறள் 163:
அறனாக்கம் வேண்டாதான்
என்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்
பேணா தழுக்கறுப் பான்
மு.வ உரை:
தனக்கு அறமும் ஆக்கமும்
விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு
மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் உயர்வு கண்டு
மகிழாமல் பொறாமைப்படுபவன்,
அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான்
கலைஞர் உரை:
அறநெறியையும், ஆக்கத்தையும்
விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல்
பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்
குறள் 164:
அழுக்காற்றின் அல்லவை
செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து
ஏதம் படுபாக் கறிந்து
மு.வ உரை:
பொறாமைப்படுதலாகிய தவறான
நெறியில் துன்பம் ஏற்படுதை அறிந்து, பொறாமை காரணமாக
அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.
சாலமன் பாப்பையா உரை:
பொறாமை கொண்டால் துன்பம்
வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்
கலைஞர் உரை:
தீய வழியில் சென்றால்
துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்
குறள் 165:
அழுக்கா றுடையார்க்
கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது
வழுக்கியுங் கேடீன் பது
மு.வ உரை:
பொறாமை உடையவர்க்கு வேறு
பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது
கேட்டைத் தருவது அது.
சாலமன் பாப்பையா உரை:
பொறாமை உடையவர்க்குத் தீமை
தரப் பகைவர் வேண்டியதில்லை;
பொறாமையே போதும்
கலைஞர் உரை:
பொறாமைக் குணம்
கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி
விடும்
குறள் 166:
கொடுப்ப தழுக்கறுப்பான்
சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉ மின்றிக் கெடும்
உண்பதூஉ மின்றிக் கெடும்
மு.வ உரை:
பிறர்க்கு உதவியாகக்
கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும்
உணவும் இல்லாமல் கெடும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்குக் கொடுப்பதைக்
கண்டு பொறாமைப் படுகிறவனின் குடும்பம், உடுக்கவும், உண்ணவும் இல்லாமல் அலையும்.
கலைஞர் உரை:
உதவியாக ஒருவருக்குக்
கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை
மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட
வழியில்லாமல் ஆக்கிவிடும்
குறள் 167:
அவ்வித் தழுக்கா
றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்
தவ்வையைக் காட்டி விடும்
மு.வ உரை:
பொறாமை உடையவனைத்
திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் உயர்வு கண்டு
பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு
அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.
கலைஞர் உரை:
செல்வத்தை இலக்குமி
என்றும்,
வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு பொறாமைக்
குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு
அகன்று விடுவாள்
குறள் 168:
அழுக்கா றெனவொரு பாவி
திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்
தீயுழி உய்த்து விடும்
மு.வ உரை:
பொறாமை என்று கூறப்படும்
ஒப்பற்ற பாவி,
ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி
விடும்.
சாலமன் பாப்பையா உரை:
பொறாமை எனப்படும்
ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு,
அவனை நரகத்திலும் அது சேர்க்கும்
கலைஞர் உரை:
பொறாமை எனும் தீமை
ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்
குறள் 169:
அவ்விய நெஞ்சத்தான்
ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்
கேடும் நினைக்கப் படும்
மு.வ உரை:
பொறாமை பொருந்திய
நெஞ்சத்தானுடைய ஆக்கமும்,
பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை
சாலமன் பாப்பையா உரை:
பொறாமை கொண்ட மனத்தவனின்
உயர்வும்,
அது இல்லாத நல்லவனின் தாழ்வும் பற்றி ஆராய்க
கலைஞர் உரை:
பொறாமைக் குணம் கொண்டவனின்
வாழ்க்கை வளமாக இருப்பதும்,
பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும்
வியப்புக்குரிய செய்தியாகும்
குறள் 170:
அழுக்கற் றகன்றாரும்
இல்லையஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்
மு.வ உரை:
பொறாமைப்பட்டுப்
பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து
நீங்கியவரும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
பொறாமை கொண்டு
உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை
கலைஞர் உரை:
பொறாமை கொண்டதால் புகழ்
பெற்று உயர்ந்தோரும் இல்லை;
பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை
0 Comments