பிறன்பொருளான்
பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்க ணில்
தறம்பொருள் கண்டார்க ணில்
மு.வ உரை:
பிறனுடைய உரிமையாகிய
மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும்
ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
இவ்வுலகில் அறத்தையும், பொருளையும்
கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை
இல்லை.
கலைஞர் உரை:
பிறன் மனைவியிடத்து
விருப்பம் கொள்ளும் அறியாமை,
உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம்
இல்லை
குறள் 142:
அறன்கடை நின்றாரு ளெல்லாம்
பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில்
நின்றாரிற் பேதையா ரில்
மு.வ உரை:
அறத்தை விட்டுத்
தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று
நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
பாவ வழியில் நடக்கும்
மனிதருள் எல்லாம்,
அடுத்தவன் மனைவியை விரும்பி அவன் வாசலில் நிற்கும் மூடனைப் போன்ற
கடை நிலை மனிதர் வேறு இல்லை
கலைஞர் உரை:
பிறன் மனைவியை அடைவதற்குத்
துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக்
காட்டிலும் கீழானவர்கள்
குறள் 143:
விளிந்தாரின் வேறல்லர்
மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்
தீமை புரிந்தொழுகு வார்
மு.வ உரை:
ஐயமில்லாமல் தெளிந்து
நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை
விட வேறுபட்டவர் அல்லர்.
சாலமன் பாப்பையா உரை:
தன்னைச் சந்தேகப்படாதவரின்
வீட்டிற்குள் நுழைந்து,
அடுத்தவரின் மனைவியுடன் தவறான தொடர்பு கொண்டு வாழ்பவன், இறந்து போனவனே அன்றி உயிருடன் வாழ்பவன் அல்லன்
கலைஞர் உரை:
நம்பிக் பழகியவர் வீட்டில், அவரது
மனைவியிடம் தகாத செயலில் ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும்
பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்
குறள் 144:
எனைத்துணைய ராயினும்
என்னாந் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்
தேரான் பிறனில் புகல்
மு.வ உரை:
தினையளவும் ஆராய்ந்து
பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை
உடையவராயினும் என்னவாக முடியும்?
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவன் மனைவியை
விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எணணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை
உடையவனாய் இருந்துதான் என்ன?
கலைஞர் உரை:
பிழை புரிகிறோம் என்பதைத்
தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம்
கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச்
செய்துவிடும்
குறள் 145:
எளிதென இல்லிறப்பா
னெய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி
விளியாது நிற்கும் பழி
மு.வ உரை:
இச்செயல் எளியது என
எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், எப்போதும்
அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்
சாலமன் பாப்பையா உரை:
அடைவது எளிது என எண்ணி
அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும்
பழியைப் பெறுவான்.
கலைஞர் உரை:
எளிதாக அடையலாம் என
எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்
குறள் 146:
பகைபாவம் அச்சம் பழியென
நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்
இகவாவாம் இல்லிறப்பான் கண்
மு.வ உரை:
பகை பாவம் அச்சம் பழி
என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி
நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவன் மனைவியிடம்
வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.
கலைஞர் உரை:
பிறன் மனைவியிடம்
முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம்,
பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை
குறள் 147:
அறனியலான் இல்வாழ்வா
னென்பான் பிறனியலான்
பெண்மை நயவா தவன்
பெண்மை நயவா தவன்
மு.வ உரை:
அறத்தின் இயல்போடு
பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை
விரும்பாதவனே
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவனுக்கு
உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்
கலைஞர் உரை:
பிறன் மனைவியிடம் பெண்மை
இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்
குறள் 148:
பிறன்மனை நோக்காத பேராண்மை
சான்றோர்க்
கறனென்றோ ஆன்ற வொழுக்கு
கறனென்றோ ஆன்ற வொழுக்கு
மு.வ உரை:
பிறனுடைய மனைவியை விரும்பி
நோக்காத பெரிய ஆண்மை,
சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த
ஒழுக்கமுமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவன் மனைவியை
மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான
ஒழுக்கமும் ஆகும்
கலைஞர் உரை:
வெறொருவன் மனைவியைக் காம
எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும்
ஆகும்
குறள் 149:
நலக்குரியார் யாரெனின் நாமநீர்
வைப்பின்
பிறற்குரியாள் தோள்தோயா தார்
பிறற்குரியாள் தோள்தோயா தார்
மு.வ உரை:
கடல் சூழ்ந்த உலகத்தில்
நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே
ஆவர்
சாலமன் பாப்பையா உரை:
அச்சந்தரும் கடலால்
சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் எவர் என்றால், அடுத்தவனுக்கு
உரியவளின் தோளைச் சேராதவரே
கலைஞர் உரை:
பிறன் மனைவியின் தோளைத்
தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர்
குறள் 150:
அறன்வரையா னல்ல செயினும்
பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று
பெண்மை நயவாமை நன்று
மு.வ உரை:
ஒருவன் அறநெறியில்
நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின்
பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது
சாலமன் பாப்பையா உரை:
அறம் செய்யாமல் பாவத்தையே
செய்பவனாக இருந்தாலும் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவிமேல் ஆசைப்படாமல் இருப்பது
நல்லது.
கலைஞர் உரை:
பிறன் மனைவியை விரும்பிச்
செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்
0 Comments