இல்லை தவறவர்க் காயினும்
ஊடுதல்
வல்ல தவரளிக்கும் ஆறு
வல்ல தவரளிக்கும் ஆறு
மு.வ உரை:
அவரிடம் தவறு ஒன்றும்
இல்லையானலும்,
அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு
செலுத்துமாறு செய்ய வல்லது.
சாலமன் பாப்பையா உரை:
அவரிடம் தவறே இல்லை
என்றாலும்,
அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல்.
கலைஞர் உரை:
எந்த தவறும் இல்லாத
நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக
வளர்க்கக் கூடியது
குறள் 1322:
ஊடலின் தோன்றும் சிறுதுனி
நல்லளி
வாடினும் பாடு பெறும்
வாடினும் பாடு பெறும்
மு.வ உரை:
ஊடுதலால் உண்டாகின்ற சிறிய
துன்பம்,
காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை
பெறும்.
சாலமன் பாப்பையா உரை:
ஊடல் காரணமாக என்னிடம்
தோன்றும் சிறு துன்பத்தினால் அவர் என்மீது காட்டும் பேரன்பு வாடினாலும் பெருமை
பெறும்.
கலைஞர் உரை:
காதலரிடையே மலர்நதுள்ள
நல்லன்பு சற்று வாடுவதற்கு,
ஊடுதல் காரணமாக இருந்தாலும் அதனால் விளைகிற சிறிய துன்பம்
பெருமையுடையதேயாகும்
குறள் 1323:
புலத்தலிற் புத்தேள்நா
டுண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து
நீரியைந் தன்னார் அகத்து
மு.வ உரை:
நிலத்தோடு நீர் பொருந்தி
கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம்
இருக்கின்றதோ.
சாலமன் பாப்பையா உரை:
நிலத்தோடு நீர்
கலந்தாற்போன்ற ஒற்றுமையை உடைய என்னவரோடு ஊடிப் பெறும் இன்பத்தைப் போலத் தேவர்கள்
நாட்டு இன்பம் இருக்குமோ?
கலைஞர் உரை:
நிலத்தோடு நீர் கலந்தது
போல அன்புடன் கூடியிருக்கும் காதலரிடத்தில் ஊடல் கொள்வதை விடப் புதிய உலகம்
வேறொன்று இருக்க முடியுமா?
குறள் 1324:
புல்லி விடாஅப் புலவியுள்
தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை
உள்ளம் உடைக்கும் படை
மு.வ உரை:
காதலரைத் தழுவிக்கொண்டு
விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை
தோன்றுகிறது.
சாலமன் பாப்பையா உரை:
என்னவரைத் தழுவிக் கொண்டு, விடாமல்
இருப்பதற்குக் காரணமாகிய ஊடலில் அதற்குமேலே சென்று என் உறுதியையும் உடைக்கும்
ஆயுதம் இருக்கிறது.
கலைஞர் உரை:
இறுகத் தழுவி இணை
பிரியாமல் இருப்பதற்குக் காரணமாக ஊடல் அமைகிறது அந்த ஊடலில்தான் என் உள்ளத்து
உறுதியைக் குலைக்கும் படைக்கலனும் இருக்கிறது
குறள் 1325:
தவறிலர் ஆயினும்
தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து
அகறலின் ஆங்கொன் றுடைத்து
மு.வ உரை:
தவறு இல்லாத போதும்
ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது
ஓர் இன்பம் உள்ளது.
சாலமன் பாப்பையா உரை:
ஆண்கள் மீது தவறு இல்லை
என்றாலும் தவறு செய்தவராகவே நின்று, மனைவியால் ஊடப்பட்டு தாம்
விரும்பும் மனைவியின் மெல்லிய தோள்களைக் கூடப் பெறாதபோது, அந்த
ஊடலிலும் ஓர் இன்பம் இருக்கிறது.
கலைஞர் உரை:
தவறே செய்யாத
நிலையிலும்கூட தன்னுள்ளம் கொள்ளை கொண்டவளின் ஊடலுக்கு ஆளாகி அவளது மெல்லிய
தோள்களைப் பிரிந்திருப்பதில் ஓர் இன்பம் இருக்கிறது
குறள் 1326:
உணலினும் உண்ட தறலினிது
காமம்
புணர்தலின் ஊடல் இனிது
புணர்தலின் ஊடல் இனிது
மு.வ உரை:
உண்பதை விட முன் உண்ட
உணவுச் செரிப்பது இன்பமானது,
அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.
சாலமன் பாப்பையா உரை:
உண்பதைவிட உண்டது
செரிப்பது இனியது;
அதுபோலக், கூடிக் கலப்பதை விட ஊடுவது
காதலுக்கு இனியது.
கலைஞர் உரை:
உணவு அருந்துவதைவிட, அருந்திய
உணவு செரிப்பதிலே ஒரு சுகம் அதைப்போல் உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு
சுகம்
குறள் 1327:
ஊடலின் தோற்றவர் வென்றார்
அதுமன்னும்
கூடலிற் காணப் படும்
கூடலிற் காணப் படும்
மு.வ உரை:
ஊடலில் தோற்றவரே வெற்றி
பெற்றவர் ஆவர்,
அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும்
நிலையில் காணப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
ஊடலில் தோற்றவரே வெற்றி
பெற்றவர் ஆவார்;
அந்த வெற்றியைக் கூடிப் பெறும் இன்பத்தில் அறியலாம்.
கலைஞர் உரை:
ஊடல் என்கிற இனிய போரில்
தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார் இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும் போது
உணரப்படும்
குறள் 1328:
ஊடிப் பெறுகுவம் கொல்லோ
நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு
கூடலில் தோன்றிய உப்பு
மு.வ உரை:
நெற்றி வியர்க்கும் படியாக
கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமோ.
சாலமன் பாப்பையா உரை:
நெற்றி வியர்க்கும்படி
கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன் ஊடிப் பெறுவோமா?
கலைஞர் உரை:
நெற்றியில் வியர்வை
அரும்பிடக் கூடுவதால் ஏற்படும் இன்பத்தை, மீண்டும் ஒருமுறை ஊடல்
தோன்றினால், அதன் வாயிலாகப் பெற முடியுமல்லவா?
குறள் 1329:
ஊடுக மன்னோ ஒளியிழை
யாமிரப்ப
நீடுக மன்னோ இரா
நீடுக மன்னோ இரா
மு.வ உரை:
காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த
ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.
சாலமன் பாப்பையா உரை:
ஒளிமிகும் அணிகளை அணிந்த
இவள் இன்னும் என்னோடு ஊடட்டும், அப்போது அதிக நேரம் இருக்கும்படி நான்
வேண்டிக்கொள்ள, இந்த இரவு விடியாது நீளட்டும்.
கலைஞர் உரை:
ஒளி முகத்தழகி ஊடல்
புரிவாளாக;
அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும்
இன்பத்தைப் பெறுவதற்கும் இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக
குறள் 1330:
ஊடுதல் காமத்திற் கின்பம்
அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்
கூடி முயங்கப் பெறின்
மு.வ உரை:
காமத்திற்கு இன்பம் தருவது
ஊடுதல் ஆகும்,
ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு
இன்பமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
காதல் நுகர்ச்சிக்கு
இன்பம் ஊடுதலே அவ்வூடலுக்கும் இன்பம், அளவு அறிந்து ஊடலை நீக்கிக்
கூடித் தழுவுதலே.
கலைஞர் உரை:
ஒருவருக்கொருவர்
செல்லமாகச் சினங்கொண்டு பிரிந்திருப்பது எனப்படும் ஊடல், இருவரும்
சேர்ந்த பிறகு காதல் இன்பத்தை அதிகமாகப் பருகிட உதவும் எனவே ஊடல் கொள்வதே ஒரு
இன்பமான செயல்தான்
0 Comments