புல்லா திராஅப் புலத்தை
அவருறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது
அல்லல்நோய் காண்கம் சிறிது
மு.வ உரை:
( ஊடும்போது
அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக
அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.
சாலமன் பாப்பையா உரை:
நாம் ஊடும்போது அவர்
அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே;
ஊடல் செய்.
கலைஞர் உரை:
ஊடல் கொள்வதால் அவர் துன்ப
நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக
குறள் 1302:
உப்பமைந் தற்றால் புலவி
அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்
மிக்கற்றால் நீள விடல்
மு.வ உரை:
உப்பு, உணவில்
அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து
நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப்
போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
உணவின் அளவிற்கு ஏற்ப
உப்பின் அளவு அமைவதை போல்,
கலவி இன்பத்திற்கு வேண்டும் அளவிற்கு ஏற்ப ஊடல் அமையட்டும்; அதை அளவு கடந்து கொஞ்சம் நீட்டினாலும், உப்பின்
அளவைக் கூட்டுவது போல் ஆகும்.
கலைஞர் உரை:
ஊடலுக்கும் கூடலுக்கும்
இடையில் உள்ள காலம் உணவில் இடும் உப்பு போல் ஓரளவுடன் இருக்க வேண்டும் அந்தக் கால
அளவு நீடித்தால் உணவில் உப்பு மிகுதியானதற்கு ஒப்பாக ஆகிவிடும்
குறள் 1303:
அலந்தாரை அல்லல்நோய்
செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்
புலந்தாரைப் புல்லா விடல்
மு.வ உரை:
தம்மோடு பிணங்கியவரை
ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய்
செய்து வரத்தினாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
தன்னுடன் ஊடல் கொண்ட
மனைவியின் ஊடலை நீக்கிக் கூடாமல் போவது, ஏற்கனவே
துன்பப்பட்டவர்களுக்கு மேலும் அதிகத் துன்பத்தைக் கொடுத்தது போலாம்.
கலைஞர் உரை:
ஊடல் கொண்டவரின் ஊடல்
நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது, ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும்
துன்பநோய்க்கு ஆளாக்கி வருத்துவதாகும்
குறள் 1304:
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று
வள்ளி முதலரிந் தற்று
மு.வ உரை:
பிணங்கியவரை ஊடலுணர்த்தி
அன்பு செய்யாமல் இருத்தல்,
முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
தன்னுடன் ஊடல் கொண்ட
மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது,
முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம்.
கலைஞர் உரை:
ஊடல் புரிந்து
பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது
ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்
குறள் 1305:
நலத்தகை நல்லவர்க் கேஎர்
புலத்தகை
பூவன்ன கண்ணார் அகத்து
பூவன்ன கண்ணார் அகத்து
மு.வ உரை:
நல்ல பண்புகள் அமைந்த நல்ல
ஆடவர்க்கு அழகு,
மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சம் விளையும் ஊடலின் சிறப்பே
ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குணங்களால்
உயர்ந்தவருக்கு அழகு தருவது,
பூப்போன்ற கண்ணை உடைய மனைவியின் மனத்தே நடக்கும் ஊடலின் மிகுதியே.
கலைஞர் உரை:
மலர் விழி மகளிர் நெஞ்சில்
விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும்
குறள் 1306:
துனியும் புலவியும்
இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று
கனியும் கருக்காயும் அற்று
மு.வ உரை:
பெரும் பிணக்கும் சிறு
பிணக்கும் இல்லாவிட்டால்,
காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும்.
சாலமன் பாப்பையா உரை:
வளர்ந்த ஊடலாகிய துனியும், இளம்
ஊடலாகிய புலவியும் இல்லாது போய்விட்டால், காதல் நிறைந்த
இல்லறம், முதிர்ந்த பழமும் இளங்காயும் போல் ஆகிவிடும்.
கலைஞர் உரை:
பெரும்பிணக்கும், சிறுபிணக்கும்
ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய
பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே
இருக்கும்
குறள் 1307:
ஊடலின் உண்டாங்கோர்
துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று
நீடுவ தன்றுகொல் என்று
மு.வ உரை:
கூடியிருக்கும் இன்பம்
இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு
ஒருவகைத் துன்பம் இருக்கின்றது.
சாலமன் பாப்பையா உரை:
இனிக் கலவி நீளுமோ நீளாதோ
என்று எண்ணுவதால்,
இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு.
கலைஞர் உரை:
கூடி மயங்கிக்
களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்து விடுமோ என எண்ணுவதால் ஊடலிலும்
ஒருவகைத் துன்பம் காதலர்க்கு உண்டு
குறள் 1308:
நோதல் எவன்மற்று
நொந்தாரென் றஃதறியும்
காதலர் இல்லா வழி
காதலர் இல்லா வழி
மு.வ உரை:
நம்மால் இவர் வருந்தினார்
என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?
சாலமன் பாப்பையா உரை:
இவர் நமக்காக வருந்தினார்
என்று அவ் வருத்தத்தை அறியும் அன்பரைப் பெறாதபோது, ஒருவர் வருந்துவதால் என்ன
பயன்?
கலைஞர் உரை:
நம்மை நினைத்தல்லவோ
வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர் இல்லாத போது வருந்துவதால் என்ன பயன்?
குறள் 1309:
நீரும் நிழல தினிதே
புலவியும்
வீழுநர் கண்ணே இனிது
வீழுநர் கண்ணே இனிது
மு.வ உரை:
நீரும் நிழலை
அடுத்திருப்பதே இனிமையானது;
அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில்
கொள்வதே இன்பமானது.
சாலமன் பாப்பையா உரை:
நீரும்கூட வெயிலுக்குக்
கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம்
மட்டுமே இனிமை ஆனது.
கலைஞர் உரை:
நிழலுக்கு அருகில் உள்ள
நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்; அதுபோல அன்புள்ளவர்களிடம்
கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும்
குறள் 1310:
ஊடல் உணங்க விடுவாரோ
டென்னெஞ்சம்
கூடுவேம் என்ப தவா
கூடுவேம் என்ப தவா
மு.வ உரை:
ஊடல் கொண்டபோது உணர்த்தி
மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று
முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே.
சாலமன் பாப்பையா உரை:
ஊடி, என்
நெஞ்சை வாட விட்டிருப்பவனோடும் கூடுவோம் என்று என் நெஞ்சம் முயல்வதற்குக் காரணம்
ஆசையே.
கலைஞர் உரை:
ஊடலைத் தணிக்காமல்
வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு
அதன் அடங்காத ஆசையே காரணம்
0 Comments