கரப்பினுங் கையிகந்
தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு
உரைக்கல் உறுவதொன் றுண்டு
மு.வ உரை:
நீ சொல்லாமல் மறைத்தாலும்
நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக் கூடிய செய்தி ஒன்று
இருக்கிறது.
சாலமன் பாப்பையா உரை:
நீ சொல்லாது மறைத்தாலும், மறைக்க
உடன்படாமல், உன் மை தீட்டப் பெற்ற கண்களே எனக்குச் சொல்ல
விரும்பும் செய்தி ஒன்று உண்டு.
கலைஞர் உரை:
வெளியில் சொல்லாமல்
மறைக்கப் பார்த்தாலும்,
நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு;
அதுதான் பிரிவை விரும்பாத காதல்
குறள் 1272:
கண்ணிறைந்த காரிகைக்
காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது
பெண்நிறைந்த நீர்மை பெரிது
மு.வ உரை:
கண் நிறைந்த அழகும்
மூங்கில் போன்ற தோளும் உடைய என் காதலிக்குப் பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும்
இயல்பு மிகுதியாக உள்ளது.
சாலமன் பாப்பையா உரை:
என் கண் நிறைந்த அழகையும், மூங்கிலைப்
போன்ற தோளையும் உடைய இப்பேதைக்குப் பெண்கள் எல்லாரிடமும் இருக்கும் குண மேன்மையிலும்
அதிக மேன்மை இருக்கிறது.
கலைஞர் உரை:
கண்நிறைந்த அழகும்
மூங்கில் போன்ற தோளும் கொண்ட என் காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே
பேரழகாகும்
குறள் 1273:
மணியில் திகழ்தரு நூல்போல்
மடந்தை
அணியில் திகழ்வதொன் றுண்டு
அணியில் திகழ்வதொன் றுண்டு
மு.வ உரை:
( கோத்த)
மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு
ஒன்று இருக்கின்றது.
சாலமன் பாப்பையா உரை:
கோக்கப்பட்ட பளிங்கிற்குள்
கிடந்து வெளியே தெரியும் நூலைப் போல இவளின் அழகிற்குள் கிடந்து வெளியே தெரியும்
குறிப்பு ஒன்று உண்டு.
கலைஞர் உரை:
மணியாரத்திற்குள்
மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு
ஒன்று உளது
குறள் 1274:
முகைமொக்குள் உள்ளது
நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு
மு.வ உரை:
அரும்பு தோன்றும்போது
அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில்
அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது.
சாலமன் பாப்பையா உரை:
மலராத அரும்புக்குள்
நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது
காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.
கலைஞர் உரை:
மலராத அரும்புக்குள்
நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது
காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது
குறள் 1275:
செறிதொடி செய்திறந்த
கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன் றுடைத்து
தீர்க்கும் மருந்தொன் றுடைத்து
மு.வ உரை:
காதலி என்னை நோக்கி செய்து
விட்டுச் சென்ற கள்ளமான குறிப்பு, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் மருந்து
ஒன்று உடையதாக இருக்கின்றது.
சாலமன் பாப்பையா உரை:
நெருங்கி வளையல்களை அணிந்த
என் மனைவி நான் மட்டுமே அறிய மறைத்துக் காட்டும் ஒரு குறிப்பில் என்
பெருங்கவலையைத் தீர்க்கும் மருந்து ஒன்றும் உண்டு.
கலைஞர் உரை:
வண்ணமிகு வளையல்கள் அணிந்த
என் வடிவழகியின் குறும்புத்தனமான பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும்
துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது
குறள் 1276:
பெரிதாற்றிப் பெட்பக்
கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து
அன்பின்மை சூழ்வ துடைத்து
மு.வ உரை:
பெரிதும் அன்பு செய்து
விரும்புமாறு கூடுதல்,
அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல்கைவிட எண்ணுகின்ற
குறிப்பை உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அவரைப் பிரிந்து
இருந்ததால் ஏற்பட்ட துன்பத்தினைப் பெரிதும் பொறுத்துக் கொண்டு இப்போது நான்
மகிழும் வண்ணம் அவர் என்னைக் கூடுவது அவரது அன்பின்மையை எண்ணிப் பார்க்கச்
செய்கிறது.
கலைஞர் உரை:
ஆரத் தழுவி அளவற்ற அன்பு
காட்டி அவர் என்னைக் கூடுவதானது மீண்டும் அவர் என்னைப் பிரிந்து செல்லப் போகிற
குறிப்பை உணர்த்துவது போல் இருக்கிறதே
குறள் 1277:
தண்ணந் துறைவன் தணந்தமை
நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை
முன்னம் உணர்ந்த வளை
மு.வ உரை:
குளிர்ந்த துறையை உடைய
காதலன் பிரிந்த பிரிவை நம்மை விட முன்னமே நம்முடைய வளையல்கள் உணர்ந்து கழன்று
விட்டனவே!
சாலமன் பாப்பையா உரை:
குளிர்ந்த துறைகளுக்குச்
சொந்தக்காரரான அவர் என்னை உடலால் கூடி உள்ளத்தால் பிரிந்திருப்பதை என்னைக்
காட்டிலும் என் கை வளையல்கள் முன்னமே அறிந்துவிட்டன.
கலைஞர் உரை:
குளிர்ந்த நீர்த் துறைக்கு
உரிய காதலன் உடலால் கூடியிருக்கும் போது, உள்ளத்தால் பிரியும் நினைவு
கொண்டதை என் வளையல்கள் எனக்கு முன்னரே உணர்ந்து கழன்றன போலும்!
குறள் 1278:
நெருநற்றுச் சென்றாரெங்
காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து
எழுநாளேம் மேனி பசந்து
மு.வ உரை:
எம்முடைய காதலர்
நேற்றுதான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு
நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்.
சாலமன் பாப்பையா உரை:
என் காதலர் நேற்றுத்தான்
என்னைப் பிரிந்து போனார்;
அப்பிரிவிற்கு வாடி என் மேனியின் நிறம் வேறுபட்டு ஏழு
நாள்களாகிவிட்டன.
கலைஞர் உரை:
நேற்றுத்தான் எம் காதலர்
பிரிந்து சென்றார்;
எனினும், பல நாட்கள் கழிந்தன என்பது போல் பசலை
நிறம் எம்மைப் பற்றிக் கொண்டதே
குறள் 1279:
தொடிநோக்கி மென்தோளும்
நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது
அஃதாண் டவள்செய் தது
மு.வ உரை:
தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய
தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு
உடன்போக்காகிய அதுவேயாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நீ என்னைப் பிரிந்தால் இவை
என்னுடன் இருக்கமாட்டா என்று கை வளையல்களைப் பார்த்தாள். துணையாக தன் மெல்லிய தோள்களும்
மெலியும் என அவற்றைப் பார்த்தாள்; இவை இரண்டும் நடக்காதபடி நீர் நடந்து கொள்ள
வேண்டும் என்று தன் பாதங்களையும் பார்த்தாள், பிரிந்தால்
நானும் உடன் வருவேன் என்ற ஒரு குறிப்பும் இதனுள் இருக்கிறது.
கலைஞர் உரை:
பிரிவு காரணமாகக் கழலக்
கூடிய வளையலையும்,
மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவன் காதலனைத்
தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினான்
குறள் 1280:
பெண்ணினாற் பெண்மை
உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு
காமநோய் சொல்லி இரவு
மு.வ உரை:
கண்ணினால் காமநோயைத்
தெரிவித்துப் பிரியாமல் இருக்குமாறு இரத்தல், பெண் தன்மைக்கு மேலும் பெண்
தன்மை உடையது என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை:
பெண்கள் தம் காதல் நோயைக்
கண்ணாலேயே சொல்லி அதைத் தீர்க்கும்படி வேண்டுவது பெண்மை. மேலும் ஒரு பெண்மையைக்
கொண்டிருப்பதாகும் என்பர் அறிந்தோர்.
கலைஞர் உரை:
காதல் வேட்கையைக் கண்களால்
உணர்த்திக் காதலனுடன் போவதற்கு இரந்து நிற்கும்போது பெண்மைக்குப் பெண்மை
சேர்த்தாற் போன்று இருக்கின்றது
0 Comments