உள்ளினும் தீராப்
பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது
கள்ளினும் காமம் இனிது
மு.வ உரை:
நினைத்தாலும் தீராத பெரிய
மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் ) கள்ளை விட காமம்
இன்பமானதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
முன்பு என் மனைவியுடன்
கூடி அனுபவித்த இன்பத்தைப் பிரிந்திருக்கும் போது நினைத்தாலும் அது நீங்காத பெரு
மகிழ்ச்சியைத் தருவதால் குடித்தால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளைக் காட்டிலும்
காதல் இன்பமானது.
கலைஞர் உரை:
உண்டபோது மட்டும்
மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்
குறள் 1202:
எனைத்தொன் றினிதேகாண்
காமந்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன் றில்
நினைப்ப வருவதொன் றில்
மு.வ உரை:
தாம் விரும்புகின்ற காதலர்
தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம்
எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
நாம் விரும்புபவரைப்
பிரிவிலும் நினைத்தால் பிரிவுத் துன்பம் வராது. அதனால் என்ன ஆனாலும் சரி, காதல்
இனியதுதான்.
கலைஞர் உரை:
விரும்பி இணைந்த காதலரை
நினைத்தலால்,
பிரிவின் போது வரக்கூடிய துன்பம் வருவதில்லை எனவே எந்த வகையிலும்
காதல் இனிதேயாகும்
குறள் 1203:
நினைப்பவர் போன்று
நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்
சினைப்பது போன்று கெடும்
மு.வ உரை:
தும்மல் வருவது போலிருந்து
வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல்
விடுகின்றாரோ?
சாலமன் பாப்பையா உரை:
எனக்குத் தும்மல் வருவது
போல் வந்து அடங்கி விடுகிறது. அவர் என்னை நினைக்கத் தொடங்கி, நினைக்காமல்
விடுவாரோ?
கலைஞர் உரை:
வருவது போலிருந்து வராமல்
நின்று விடுகிறதே தும்மல்;
அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ?
குறள் 1204:
யாமும் உளேங்கொல்
அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்
தோஒ உளரே அவர்
தோஒ உளரே அவர்
மு.வ உரை:
எம்முடைய நெஞ்சில்
காதலராகிய அவர் இருக்கின்றாரே! ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல்
இருக்கின்றோமோ?
சாலமன் பாப்பையா உரை:
என் நெஞ்சத்தில் அவர்
எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா?
கலைஞர் உரை:
என் நெஞ்சைவிட்டு
நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு
நீங்காமல் நான் இருக்கின்றேனா?
குறள் 1205:
தம்நெஞ்சத் தெம்மைக்
கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத் தோவா வரல்
எம்நெஞ்சத் தோவா வரல்
மு.வ உரை:
தம்முடைய நெஞ்சில் எம்மை
வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப்
பற்றி நாணமாட்டாரோ?
சாலமன் பாப்பையா உரை:
தம் நெஞ்சத்தில் என்னை
விலக்கிவிட்ட அவர்,
என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் வருவதற்கு வெட்கப் படமாட்டாரோ?
கலைஞர் உரை:
அவருடைய நெஞ்சில் எமக்கு
இடம் தராமல் இருப்பவர்;
எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக
வெட்கப்படமாட்டார் போலும்
குறள் 1206:
மற்றியான் என்னுளேன் மன்னோ
அவரொடுயான்
உற்றநாள் உள்ள உளேன்
உற்றநாள் உள்ள உளேன்
மு.வ உரை:
காதலராகிய அவரோடு யான்
பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு
எதனால் உயிர் வாழ்கின்றேன்?
சாலமன் பாப்பையா உரை:
அவரோடு கூடி வாழ்ந்த
நாள்களின் நினைவுகளை நினைப்பதால்தான் நான் இன்னும் உயிர் வாழ்கிறேன். இல்லை
என்றால்,
வேறு எதனால் வாழ்வேன்?
கலைஞர் உரை:
நான் அவரோடு சேர்ந்திருந்த
நாட்களை நினைத்துத் தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான்
உயிர்வாழ முடியும்?
குறள் 1207:
மறப்பின் எவனாவன் மற்கொல்
மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்
உள்ளினும் உள்ளம் சுடும்
மு.வ உரை:
( காதலரை )
மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல்
மறந்து விட்டால் என்ன ஆவேனோ?
சாலமன் பாப்பையா உரை:
அந்த நாள்களின் நினைவுகளை
மறவாமல் நினைத்தாலும் என் நெஞ்சு சுடும்; அப்படி இருக்க மறந்தால்
வாழ்வது எப்படி?
கலைஞர் உரை:
மறதி என்பதே இல்லாமல்
நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே!
பினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?
குறள் 1208:
எனைத்து நினைப்பினும்
காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு
காதலர் செய்யும் சிறப்பு
மு.வ உரை:
காதலரை எவ்வளவு மிகுதியாக
நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி
அத்தன்மையானது அன்றோ!
சாலமன் பாப்பையா உரை:
அவரை நான் எப்படி
எண்ணினாலும் கோபப்படமாட்டார்; அன்புள்ள அவர் எனக்குத் தரும் இன்பம் அத்தகையது
அன்றோ!
கலைஞர் உரை:
எவ்வளவு அதிகமாக
நினைத்தாலும்,
அதற்காகக் காதலர் என் மீது சினம் கொள்ளமாட்டார். அவர் எனக்குச்
செய்யும் பெரும் உதவி அதுவல்லவா?
குறள் 1209:
விளியுமென் இன்னுயிர்
வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து
அளியின்மை ஆற்ற நினைந்து
மு.வ உரை:
நாம் இருவரும் வேறு அல்லேம்
என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைத்து என்
இனிய உயிர் அழிகின்றது.
சாலமன் பாப்பையா உரை:
நம் உயிர் வேறு அல்ல; ஒன்றே
என்று முன்பு சொன்ன அவரின் இப்போதைய கருணையற்ற தன்மையை அதிகம் எண்ணி, என் உயிர் போய்க்கொண்டே இருக்கிறது.
கலைஞர் உரை:
``நாம்
ஒருவரே; வேறு வேறு அல்லர்'' எனக்கூறிய
காதலர் இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால்
என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது
குறள் 1210:
விடாஅது சென்றாரைக்
கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி
படாஅதி வாழி மதி
மு.வ உரை:
தி்ங்களே! பிரியாமல்
இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ
மறைந்து விடாமல் இருப்பாயாக!
சாலமன் பாப்பையா உரை:
திங்களே! பிரியாமலிருந்து
இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து
விடாமல் இருப்பாயாக!
கலைஞர் உரை:
நிலவே! நீ வாழ்க; இணைபிரியாமலிருந்து,
பிரிந்து சென்றுள்ள காதலரை நான் என் கண்களால் தேடிக்
கண்டுபிடித்திடத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக
0 Comments