நயந்தவர்க்கு நல்காமை
நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க் குரைக்கோ பிற
பண்பியார்க் குரைக்கோ பிற
மு.வ உரை:
விரும்பிய காதலர்க்கு
அன்று பிரிவை உடன்பட்டேன்;
பிரிந்தபின் பசலை உற்ற என் தன்மையை வேறு யார்க்குச் சென்று
சொல்வேன்?
சாலமன் பாப்பையா உரை:
என்னை விரும்பிய என்னவர்
பிரியச் சம்மதித்த நான்,
அவர் பிரிவைத் தாங்காமல் பசலை கொண்ட என் மேனியின் இயல்பை யாரிடம்
போய்ச் சொல்வேன்?
கலைஞர் உரை:
என்னைப் பிரிந்து
செல்வதற்கு என் காதலர்க்கு ஒப்புதல் அளித்துவிட்டேன்; ஆனால்,
இப்போது பிரிவுத் துன்பத்தால் என்னுடலில் பசலை படர்வதை, யாரிடம் போய்ச் சொல்வேன்?
குறள் 1182:
அவர்தந்தார் என்னும்
தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு
மேனிமேல் ஊரும் பசப்பு
மு.வ உரை:
அந்தக் காதலர்
உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி
ஊர்ந்து பரவி வருகிறது.
சாலமன் பாப்பையா உரை:
இந்தப் பசலை அவர் எனக்குத்
தந்தது என்னும் பெருமையினால் என் மேனி எங்கும் படருகின்றன.
கலைஞர் உரை:
பிரிவு காரணமாகக் காதலர்
உண்டாக்கினார் எனும் பெருமிதம் பொங்கிடப் பசலை நிறம் என் உடலில் ஏறி ஊர்ந்து
பரவுகின்றது!
குறள் 1183:
சாயலும் நாணும்
அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து
நோயும் பசலையும் தந்து
மு.வ உரை:
காம நோயையும் பசலை
நிறத்தையும் எனக்குக் கைம்மாறாக கொடுத்து விட்டு, என் சாயலையும் நாணத்தையும்
அவர் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
சாலமன் பாப்பையா உரை:
அவர் என்னைப் பிரிகிறபோதே
உள்ளத் துன்பத்தையும் பசலையையும் எனக்குக் கொடுத்துவிட்டு அவற்றுக்கு ஈடாக என்
அழகையும் வெட்கத்தையம் கொண்டு போய்விட்டார்.
கலைஞர் உரை:
காதல் நோயையும், பசலை
நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு அவர் என் அழகையும், நாணத்தையும் எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார்
குறள் 1184:
உள்ளுவன் மன்யான் உரைப்ப
தவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு
கள்ளம் பிறவோ பசப்பு
மு.வ உரை:
யான் அவருடைய
நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?
சாலமன் பாப்பையா உரை:
நான் நினைப்பதெல்லாம்
அவரைத்தான். சொல்வது எல்லாம் அவர் குணங்களைத்தாம்; இருந்தும் இந்தப் பசலை
வந்துவிட்டதே; இது வஞ்சகம் அல்லவா?
கலைஞர் உரை:
யான் நினைப்பதும், உரைப்பதும்
அவரது நேர்மைத் திறன் பற்றியதாகவே இருக்கும்போது, என்னையறியாமலோ
வேறு வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி?
குறள் 1185:
உவக்காணெம் காதலர்
செல்வார் இவக்காணென்
மேனி பசப்பூர் வது
மேனி பசப்பூர் வது
மு.வ உரை:
அதோ பார்! எம்முடைய காதலர்
பிரிந்து செல்கின்றார்;
இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது.
சாலமன் பாப்பையா உரை:
முன்பும்கூட, அந்தப்
பக்கம் என் அன்பர் போயிருப்பார்; இந்தப் பக்கம் என் மேனி
பசலை கொண்டு விடும். முன்பே அப்படி என்றால் இப்போது எப்படி இருக்கும்?
கலைஞர் உரை:
என்னைப் பிரிந்து காதலர்
சிறிது தொலைவுகூடச் செல்லவில்லை; அதற்குள்ளாக என் மேனியில் படர்ந்து விட்டதே
பசலை நிறம்
குறள் 1186:
விளக்கற்றம் பார்க்கும்
இருளேபோல் கொண்கண்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு
மு.வ உரை:
விளக்கினுடைய மறைவைப்
பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப் போலவே, தலைவனுடைய தழுவுதலின் சோர்வைப்
பார்த்துக் காத்திருக்கினறது.
சாலமன் பாப்பையா உரை:
விளக்கு மெலிவதைப்
பார்த்து நெருங்கும் இருட்டைப் போல என்னவரின் தழுவல் நெகிழ்வதைப் பார்த்துக்
காத்திருந்த பசலை வரும்.
கலைஞர் உரை:
விளக்கின் ஒளிகுறையும்
சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப்போல, இறுகத் தழுவிய காதலன்பிடி,
சற்றுத் தளரும்போது காதலியின் உடலில் பசலைநிறம் படர்ந்து விடுகிறது
குறள் 1187:
புல்லிக் கிடந்தேன்
புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு
அள்ளிக்கொள் வற்றே பசப்பு
மு.வ உரை:
தலைவனைத் தழுவிக்
கிடந்தேன்;
பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை
நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவி விட்டதே!
சாலமன் பாப்பையா உரை:
முன்னொரு சமயம் நான்
அவரைத் தழுவிக் கிடந்தேன்;
கொஞ்சம் விலகினேன்; அவ்வளவுதான்; இந்தப் பசலை என்னை அப்படியே அள்ளிக் கொள்வது போல் வந்துவிட்டது.
கலைஞர் உரை:
தழுவிக் கிடந்தேன்; சற்றுத்
தள்ளிப் படுத்தேன்; அவ்வளவுதான்; என்னை
அள்ளிக் கொண்டு விட்டதே பசலை நிறம்!
குறள் 1188:
பசந்தாள் இவளென்ப தல்லால்
இவளைத்
துறந்தார் அவரென்பார் இல்
துறந்தார் அவரென்பார் இல்
மு.வ உரை:
இவள் பிரிவால் வருத்திப்
பசலை நிறம் அடைந்தாள் என்ற பழி சொல்வதே அல்லாமல், இவளைக் காதலர் விட்டுப்
பிரிந்தார் என்று சொல்பவர் இல்லையே!
சாலமன் பாப்பையா உரை:
இங்கோ இவள் பசலை உற்றாள்
என்று சொல்கிறார்களே தவிர,
இந்தப் பெண்ணை விட்டுவிட்டு அவர் போய்விட்டாரே என்று சொல்பவர்
ஒருவரும் இல்லை.
கலைஞர் உரை:
இவள் உடலில் பசலை நிறம்
படர்ந்தது எனப் பழித்துக் கூறுகிறார்களே அல்லாமல், இதற்குக் காரணம், காதலன் பிரிந்து சென்றிருப்பது தான் என்று சொல்பவர் இல்லையே
குறள் 1189:
பசக்கமற் பட்டாங்கென் மேனி
நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்
நன்னிலையர் ஆவர் எனின்
மு.வ உரை:
பிரிவுக்கு உடன்படச் செய்த
காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால், என்னுடைய மேனி உள்ளபடி பசலை
நிறம் அடைவதாக.
சாலமன் பாப்பையா உரை:
இந்தப் பிரிவிற்கு நான்
சம்மதிக்கும்படி செய்து பிரிந்தவர்தாம் நல்லவர் என்றால், என் மேனி
மேலும் பசலை அடைந்து விட்டுப் போகட்டும்!
கலைஞர் உரை:
பிரிந்து சென்றிட என்னை
ஒப்புக் கொள்ளுமாறு செய்த காதலர் நலமாக இருப்பார் என்றால் என்னுடல் பசலை படர்ந்தே
விளங்கிடுமாக!
குறள் 1190:
பசப்பெனப் பேர்பெறுதல்
நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்
நல்காமை தூற்றார் எனின்
மு.வ உரை:
பிரிவுக்கு உடன்படச் செய்த
காதலர் பிரிந்து வருத்துதலைப் பிறர் தூற்றாமல் இருப்பாரானால், யான் பசலை
உற்றதாக பெயர் எடுத்தல் நல்லதே.
சாலமன் பாப்பையா உரை:
என்னைச் சம்மதிக்கச்
செய்து பிரிந்தவர் இன்னும் வராமல் இருப்பதை எண்ணி அவரை ஏசாமல், இவளே பசலை
ஆயினாள் என்று இம்மக்கள் சொல்லுவர் என்றால் அப்படி ஓரு பெயரைப் பெறுவதும் நல்லதே.
கலைஞர் உரை:
என்னைப் பிரிவுக்கு
உடன்படுமாறு செய்த காதலரை அன்பில்லாதவர் என்று யாரும் தூற்றமாட்டார்கள் எனில், பசலை
படர்ந்தவள் என நான் பெயரெடுப்பது நல்லது தான்!
0 Comments