காமம் உழந்து
வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி
மடலல்ல தில்லை வலி
மு.வ உரை:
காமத்தால் துன்புற்று
(காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத்
துணை வேறொன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
காதல் நிறைவேற முடியாமல்
வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை.
கலைஞர் உரை:
காதலால் துன்புறும்
காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக மடலூர்தலைத் தவிர, வலிமையான
துணைவேறு எதுவுமில்லை
குறள் 1132:
நோனா உடம்பும் உயிரும்
மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து
நாணினை நீக்கி நிறுத்து
மு.வ உரை:
(காதலின்
பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.
சாலமன் பாப்பையா உரை:
காதலை நிறைவேற்ற முடியாது
வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன.
கலைஞர் உரை:
எனது உயிரும், உடலும்
காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப்
புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்
குறள் 1133:
நாணொடு நல்லாண்மை
பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்
காமுற்றார் ஏறும் மடல்
மு.வ உரை:
நாணமும் நல்ல ஆண்மையும்
முன்பு பெற்றிருந்தேன்,
(காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும்
மடலையே உடையேன்.
சாலமன் பாப்பையா உரை:
நாணமும் ஆண்மையும் முன்பு
பெற்றிருந்தேன்;
இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன்.
கலைஞர் உரை:
நல்ல ஆண்மையும், நாண
உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து,
காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்
குறள் 1134:
காமக் கடும்புனல்
உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை
நல்லாண்மை என்னும் புணை
மு.வ உரை:
நாணமும் நல்ல ஆண்மையுமாகிய
தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.
சாலமன் பாப்பையா உரை:
ஆம்; நாணம்,
ஆண்மை என்னும் படகுகளைக் காதலாகிய கடும் வெள்ளம் அடித்துக் கொண்டு
போய்விட்டது.
கலைஞர் உரை:
காதல் பெருவெள்ளமானது
நாணம்,
நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை
வாய்ந்தது
குறள் 1135:
தொடலைக் குறுந்தொடி
தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்
மாலை உழக்கும் துயர்
மு.வ உரை:
மடலோறுதலோடு
மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி
எனக்கு தந்தாள்.
சாலமன் பாப்பையா உரை:
மாலைப் பொழுதுகளில் நான்
அடையும் மயக்கத்தையும் அதற்கு மருந்தாகிய மடல் ஏறுதலையும், மலை போல
வளையல் அணிந்திருக்கும் அவளே எனக்குத் தந்தாள்.
கலைஞர் உரை:
மேகலையையும் மெல்லிய
வளையலையும் அணிந்த மங்கை மாலை மலரும் நோயான காதலையும், மடலூர்தல்
எனும் வேலையையும் எனக்குத் தந்து விட்டாள்
குறள் 1136:
மடலூர்தல் யாமத்தும்
உள்ளுவேன் மன்ற
படலொல்லா பேதைக்கென் கண்
படலொல்லா பேதைக்கென் கண்
மு.வ உரை:
மடலூர்தலைப் பற்றி
நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக
என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.
சாலமன் பாப்பையா உரை:
அவள் குணத்தை எண்ணி என்
கண்கள் இரவெல்லாம் உறங்குவதில்லை. அதனால் நள்ளிரவிலும்கூட மடல் ஊர்வது பறிறயே
எண்ணுவேன்.
கலைஞர் உரை:
காதலிக்காக என் கண்கள்
உறங்காமல் தவிக்கின்றன;
எனவே மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் நான் உறுதியாக எண்ணிக்
கொண்டிருக்கிறேன்
குறள் 1137:
கடலன்ன காமம் உழந்தும்
மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்
பெண்ணிற் பெருந்தக்க தில்
மு.வ உரை:
கடல் போன்ற காமநோயால்
வருந்தியும்,
மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல்
பெருமை உடைய பிறவி இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
அதுதான் அவள் பெருமை; கடல்
போலக் கரையில்லாத காதல் நோயை அவளும் அனுபவித்தாலும் மடல் ஊராது பொறுத்திருக்கும்
பெண் பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தில் வேறு இல்லை.
கலைஞர் உரை:
கொந்தளிக்கும் கடலாகக்
காதல் நோய் துன்புறுத்தினாலும்கூடப் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல்
இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை
குறள் 1138:
நிறையரியர் மன்னளியர்
என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்
மறையிறந்து மன்று படும்
மு.வ உரை:
இவர் நெஞ்சை நிறுத்தும்
நிறை இல்லாதவர்,
மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக்
கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே.
சாலமன் பாப்பையா உரை:
இவள் மன அடக்கம் மிக்கவள்; பெரிதும்
இரக்கப்பட வேண்டியவள் என்று எண்ணாமல் இந்த காதல் எங்களுக்குள் இருக்கும்
இரகசியத்தைக் கடந்து ஊருக்குள்ளேயும் தெரியப்போகிறது.
கலைஞர் உரை:
பாவம்; இவர்,
மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்திற்குரியவர்;
என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய
வெளிப்பட்டு விடக்கூடியது காதல்
குறள் 1139:
அறிகிலார் எல்லாரும்
என்றேயென் காமம்
மறுகின் மறுகும் மருண்டு
மறுகின் மறுகும் மருண்டு
மு.வ உரை:
அமைதியாய் இருந்ததால்
எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச்
சுழல்கின்றது.
சாலமன் பாப்பையா உரை:
என் காதல் எனது மன
அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும்
தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது.
கலைஞர் உரை:
என்னைத் தவிர யாரும்
அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்!
குறள் 1140:
யாம்கண்ணிற் காண நகுப
அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு
யாம்பட்ட தாம்படா ஆறு
மு.வ உரை:
யாம் பட்ட துன்பங்களைத்
தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு
நகைக்கின்றனர்.
சாலமன் பாப்பையா உரை:
நான் பார்க்க, இந்த
அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம்,
நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே!
கலைஞர் உரை:
காதல் நோயினால் வாடுவோரின்
துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள்தான், அந்த நோயினால் வருந்துவோரைப்
பார்த்து நகைப்பார்கள்
0 Comments