தகுதி யெனவொன்று நன்றே
பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்
பாற்பட் டொழுகப் பெறின்
மு.வ உரை:
அந்தந்தப் பகுதிதோறும்
முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று
கூறப்படும் அறம் நன்மையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பகைவர், நண்பர்,
அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால்
நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்.
கலைஞர் உரை:
பகைவர், அயலோர்,
நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே
நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்
குறள் 112:
செப்பம் உடையவன் ஆக்கஞ்
சிதைவின்றி
எச்சத்திற் கேமாப் புடைத்து
எச்சத்திற் கேமாப் புடைத்து
மு.வ உரை:
நடுவுநிலைமை உடையவனின்
செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நீதியை உடையவனின் செல்வம்
அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்
கலைஞர் உரை:
நடுவுநிலையாளனின்
செல்வத்திற்கு அழிவில்லை;
அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன்
அளிப்பதாகும்
குறள் 113:
நன்றே தரினும்
நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்
அன்றே யொழிய விடல்
மு.வ உரை:
தீமை பயக்காமல் நன்மையே
தருவதானாலும் நடுவு நிலைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
நன்மையே தருவதாக
இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே
விட்டு விடுக.
கலைஞர் உரை:
நடுவுநிலை தவறுவதால்
ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப்
பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்
குறள் 114:
தக்கார் தகவிலர் என்ப
தவரவர்
எச்சத்தாற் காணப் படும்
எச்சத்தாற் காணப் படும்
மு.வ உரை:
நடுவுநிலைமை உடையவர்
நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும்
பழியாலும் காணப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
இவர் நீதியாளர், இவர்
நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம், புகழ்,
பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம்.
கலைஞர் உரை:
ஒருவர் நேர்மையானவரா அல்லது
நெறி தவறி,
நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும்
புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்
குறள் 115:
கேடும் பெருக்கமும்
இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி
கோடாமை சான்றோர்க் கணி
மு.வ உரை:
கேடும் ஆக்கமும் வாழ்வில்
இல்லாதவை அல்ல;
ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு
அழகாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தீமையும் நன்மையும்
எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால்
நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.
கலைஞர் உரை:
ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும்
உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து
உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்
குறள் 116:
கெடுவல்யான் என்ப தறிகதன்
நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்
நடுவொரீஇ அல்ல செயின்
மு.வ உரை:
தன் நெஞ்சம் நடுவுநிலை
நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று
ஒருவன் அறிய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் நெஞ்சம் நீதியை
விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு
உரிய அறிகுறி.
கலைஞர் உரை:
நடுவுநிலைமை தவறிச்
செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப்
போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்
குறள் 117:
கெடுவாக வையா துலகம்
நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு
மு.வ உரை:
நடுவுநிலைமை நின்று
அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.
சாலமன் பாப்பையா உரை:
நீதி என்னும் அறவாழ்வு
வாழ்ந்தும் ஒருவன் வறுமைப்பட்டுப் போவான் என்றால், அதை வறுமை என்று உயர்ந்தோர்
எண்ணவேமாட்டார்.
கலைஞர் உரை:
நடுவுநிலைமை தவறாமல்
அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை
ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது
குறள் 118:
சமன்செய்து சீர்தூக்குங்
கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி
கோடாமை சான்றோர்க் கணி
மு.வ உரை:
முன்னே தான் சமமாக இருந்து, பின்பு
பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு
பக்கமாக சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.
சாலமன் பாப்பையா உரை:
முதலில் சமமாக நின்று
பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய
இலக்கணங்களால் அமைந்து ஓரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோராகிய நீதிபதிகளுக்கு
அழகாம்.
கலைஞர் உரை:
ஒரு பக்கம் சாய்ந்து
விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை
என்பதற்கு அழகாகும்
குறள் 119:
சொற்கோட்டம் இல்லது
செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்
உட்கோட்டம் இன்மை பெறின்
மு.வ உரை:
உள்ளத்தில் கோணுதல் இல்லாத
தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல்
நடுவுநிலைமையாம்.
சாலமன் பாப்பையா உரை:
மனம் ஓரஞ் சாராமல் சமமாக
நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி.
கலைஞர் உரை:
நேர்மையும் நெஞ்சுறுதியும்
ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும் அதற்குப்
பெயர்தான் நடுவுநிலைமை
குறள் 120:
வாணிகம் செய்வார்க்கு
வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்
பிறவும் தமபோல் செயின்
மு.வ உரை:
பிறர் பொருளையும் தம்
பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல
வாணிக முறையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் பொருளையும் தம்
பொருள் போலக் காத்து,
வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்.
கலைஞர் உரை:
பிறர் பொருளாக இருப்பினும்
அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்
0 Comments