மக்களே போல்வர் கயவர்
அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்
ஒப்பாரி யாங்கண்ட தில்
மு.வ உரை:
மக்களே போல் இருப்பார்
கயவர்,
அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப்
பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
கயவர் வெளித்தோற்றத்தில்
மனிதரைப் போலவே இருப்பர்;
விலங்கு பறவை போன்ற பிற இனங்களில் அவருக்கு ஒப்பானவரை நான் கண்டது
இல்லை.
கலைஞர் உரை:
குணத்தில் கயவராக இருப்பர்
ஆனால்,
நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார் மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி
இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்
குறள் 1072:
நன்றறி வாரிற் கயவர்
திருவுடையர்
நெஞ்சத் தவலம் இலர்
நெஞ்சத் தவலம் இலர்
மு.வ உரை:
நன்மை அறிந்தவரை விடக்
கயவரே நல்ல பேறு உடையவர்,
ஏன் என்றால், கயவர் தம் நெஞ்சில் எதைப்
பற்றியும் கவலை இல்லாதவர்.
சாலமன் பாப்பையா உரை:
நல்லது கெட்டதை
அறிந்தவரைக் காட்டிலும் கயவர் செல்வம் உடையவர் ஆவர்; காரணம், கயவர் நல்லத கெட்டது என்ற கவலையே நெஞ்சில் இல்லாதவர்.
கலைஞர் உரை:
எப்போதும் நல்லவை பற்றியே
சிந்தித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களைவிட எதைப் பற்றியும்
கவலைப்படாமலிருக்கும் கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்!
குறள் 1073:
தேவ ரனையர் கயவர்
அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்
மேவன செய்தொழுக லான்
மு.வ உரை:
கயவரும் தேவரைப் போல் தான்
விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர்
தேவரைப் போன்றவர்.
சாலமன் பாப்பையா உரை:
தம்மைக்
கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் செய்து வாழ்வதால், கயவர்
தேவரைப் போன்றவராவர்.
கலைஞர் உரை:
புராணங்களில் வரும்
தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும்
சமமாகக் கருதலாம்
குறள் 1074:
அகப்பட்டி ஆவாரைக் காணின்
அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்
மு.வ உரை:
கீழ் மக்கள் தமக்கு கீழ்
பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய்
இறுமாப்படைவர்.
சாலமன் பாப்பையா உரை:
தனக்கும் கீழாகத் தான்
விரும்பியபடி எல்லாம் வாழும் நாய் போன்றவரைக் கண்டால் அவரைக் காட்டிலும் மேலாகத்
தன் நிலையைக் காட்டி கயமை,
இறுமாப்புக் கொள்ளும்.
கலைஞர் உரை:
பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக்
காட்டிலும் இழிவான குணமுடையோரைக் கண்டால், அவர்களைவிடத் தாம்
சிறந்தவர்கள் என்ற கர்வம் கொள்வார்கள்
குறள் 1075:
அச்சமே கீழ்கள தாசாரம்
எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது
அவாவுண்டேல் உண்டாம் சிறிது
மு.வ உரை:
கீழ் மக்களின்
ஆசாரத்திற்கு காரணமாக இருப்பது அச்சமே, எஞ்சியவற்றில் அவா உண்டானால்
அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்.
சாலமன் பாப்பையா உரை:
கயவர்களிடம் நல்ஒழுக்கம்
இருந்தால் ஆட்சியைப் பற்றிய பயமே காரணம் ஆகும். அதையும் மீறி அவர்கள் ஆசைப்படும்
பொருள் கிடைப்பதாக இருந்தால் அதனாலும் கொஞ்சம் ஒழுக்கம் இருக்கும்.
கலைஞர் உரை:
தாங்கள் விரும்புவது
கிடைக்கும் என்ற நிலையேற்படும்போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள்
போலக் காட்டிக் கொள்வார்கள் மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தின் காரணமாக மட்டுமே
ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்
குறள் 1076:
அறைபறை அன்னர் கயவர்தாம்
கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைக்க லான்
மறைபிறர்க் குய்த்துரைக்க லான்
மு.வ உரை:
கயவர், தாம்
கேட்டறிந்த மறைப்பொருளைப் பிறர்க்கு வலிய கொண்டுபோய்ச் சொல்லுவதலால், அறையப்படும் பறை போன்றவர்.
சாலமன் பாப்பையா உரை:
தாம் அறிந்த ரகசியங்களைப்
பிறரிடம் வலியச் சென்று சொல்லுவதால், அடிக்கப்படும் பறையைப்
போன்றவர் கயவர்.
கலைஞர் உரை:
மறைக்கப்பட வேண்டிய
இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில், ஓடிச் சென்று பிறருக்குச்
சொல்லுகிற கயவர்களைத், தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம்
குறள் 1077:
ஈர்ங்கை விதிரார் கயவர்
கொடிறுடைக்குங்
கூன்கையர் அல்லா தவர்க்கு
கூன்கையர் அல்லா தவர்க்கு
மு.வ உரை:
கயவர் தம் கன்னத்தை
இடித்து உடைக்கும் படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும்
உதற மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
தாடையை உடைக்கும்
முறுக்கிய கை இல்லாதவர்க்குக் கயவர், தாம் உண்டு கழுவிய ஈரக்
கையைக்கூட உதறமாட்டார்.
கலைஞர் உரை:
கையை மடக்கிக் கன்னத்தில்
ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக் கொடுப்பார்களேயல்லாமல், ஈகைக்
குணமில்லாத கயவர்கள் ஏழை எளியோருக்காகத் தமது எச்சில் கைகைக்கூட உதற மாட்டார்கள்
குறள் 1078:
சொல்லப் பயன்படுவர்
சான்றோர் கரும்புபோல
கொல்லப் பயன்படும் கீழ்
கொல்லப் பயன்படும் கீழ்
மு.வ உரை:
அணுகி குறைச் சொல்லுகின்ற
அளவிலேயே சான்றோர் பயன்படுவர், கரும்புபோல் அழித்துப் பிழிந்தால் தான்
கீழ்மக்கள் பயன்படுவர்.
சாலமன் பாப்பையா உரை:
இல்லாதவர் சென்று தம்
நிலையைச் சொன்ன அளவில்,
சான்றோர் இரங்கிக் கொடுப்பர்; கயவர்களோ
கரும்பைப் பிழிவதுபோல் பிழிந்தால்தான் கொடுப்பர்.
கலைஞர் உரை:
குறைகளைச் சொன்னவுடனே
சான்றோரிடம் கோரி பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை
நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற
முடியும்
குறள் 1079:
உடுப்பதூஉம் உண்பதூஉம்
காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்
வடுக்காண வற்றாகும் கீழ்
மு.வ உரை:
கீழ் மகன் பிறர்
உடுப்பதையும்,
உண்பதையும் கண்டால் அவர் மேல் பொறாமை கொண்டு, வேண்டும்
என்றே குற்றம் காண வல்லவனாவான்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் நன்கு உடுத்த, உண்ணக்
கண்டால், அவர்மீத குற்றம் காணும் ஆற்றலை உடையவர் கயவர்.
கலைஞர் உரை:
ஒருவர் உடுப்பதையும்
உண்பதையும் கண்டுகூட பெறாமைப்படுகிற கயவன், அவர்மீது வேண்டுமென்றே
குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான்
குறள் 1080:
எற்றிற் குரியர் கயவரொன்
றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து
விற்றற் குரியர் விரைந்து
மு.வ உரை:
கயவர், எதற்கு
உரியவர், ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காக தம்மை
பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர்.
சாலமன் பாப்பையா உரை:
தமக்கு லாபமோ நட்டமோ வரும்
என்றால் தம்மைப் பிறர்க்கு அடிமை ஆக்குவர்; இதற்கு அன்றி வேறு எந்தத்
தொழிலுக்குக் கயவர் உரியர் ஆவர்?
கலைஞர் உரை:
ஒரு துன்பம் வரும்போது
அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான்
கயவர்களுக்குரிய தகுதியாகும்
0 Comments