இரக்க இரத்தக்கார்க்
காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று
அவர்பழி தம்பழி அன்று
மு.வ உரை:
இரந்து கேட்க தக்கவரைக்
கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று
ஒளிப்பாரானால் அது அவர்க்கு பழி, தமக்கு பழி அன்று.
சாலமன் பாப்பையா உரை:
ஏதும் இல்லா நிலையில், எவரிடம் ஏற்பது இழிவாகாது என்று தோன்றுகிழதோ
அவரிடம் பிச்சை ஏற்கலாம்; அவர் தர மறுத்து, மறைத்தால் பழி அவர்க்கே; இரப்பவர்க்கு அன்று.
கலைஞர் உரை:
கொடுக்கக்கூடிய தகுதி
படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதை அவர் இருந்தும்
இல்லையென்று சொன்னால், அப்படிச் சொன்னவருக்குத்தான்
பழியே தவிர கேட்டவருக்கு அல்ல
குறள் 1052:
இன்பம் ஒருவற் கிரத்தல்
இரந்தவை
துன்பம் உறாஅ வரின்
துன்பம் உறாஅ வரின்
மு.வ உரை:
இரந்து கேட்ட பொருள்
துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம்
என்று சொல்லத் தக்கதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நாம் கேட்டதைப் பிறர்
மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட
ஒருவனுக்கு இன்பமே.
கலைஞர் உரை:
வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம்
எதுவுமின்றி ஒரு பொருள் கிடைக்குமானால், அப்பொருள்
இரந்து பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும்
குறள் 1053:
கரப்பிலா நெஞ்சிற்
கடனறிவார் முன்னின்
றிரப்புமோர் ஏஎர் உடைத்து
றிரப்புமோர் ஏஎர் உடைத்து
மு.வ உரை:
ஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும், உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள்
கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒளிவு மறைவு இல்லாத மனம்
உடையவராய், இது என்கடமை என்று அறிபவர்
முன்னே நின்று, ஒன்றை அவரிடம் கேட்பதும்
கேட்பவர்க்கு அழகுதான்.
கலைஞர் உரை:
உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில் தனது வறுமை
காரணமாக இரந்து கேட்பதும் பெருமையுடையதே யாகும்
குறள் 1054:
இரத்தலும் ஈதலே போலும்
கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு
கனவிலும் தேற்றாதார் மாட்டு
மு.வ உரை:
உள்ளதை மறைத்துக் கூறும்
தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப்
போன்ற சிறப்புடையது.
சாலமன் பாப்பையா உரை:
ஒளிவு மறைவு என்பதைக்
கனவிலும் எண்ணிப் பாராதவரிடம் சென்று, ஒன்றைக்
கேட்பதும், பிறர்க்குக் கொடுப்பதைப்
போன்றதே.
கலைஞர் உரை:
இருக்கும்போது இல்லையென்று
கைவிரிப்பதைக் கனவிலும் நினைக்காதவரிடத்தில், இல்லாதார்
இரந்து கேட்பது பிறருக்கு ஈவது போன்ற பெருமையுடையதாகும்
குறள் 1055:
கரப்பிலார் வையகத்
துண்மையாற் கண்ணின்
றிரப்பவர் மேற்கொள் வது
றிரப்பவர் மேற்கொள் வது
மு.வ உரை:
ஒருவர் முன் நின்று
இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை
இல்லை என்று ஒளித்துக்கூறாத நன்மைகள் உலகத்தில் இருப்பதால் தான்.
சாலமன் பாப்பையா உரை:
கண் எதிரே நின்று, வறுமைப்பட்டவர் வாயால் கேட்காமல் கண்ணால்
கேட்கத் தொடங்குவது, ஒளிவுமறைவு இல்லாமல்
அவருக்குக் கொடுப்பவர் இவ்வுலகத்தில் இருப்பதால்தான்.
கலைஞர் உரை:
உள்ளதை இல்லையென்று
மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள், அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர்
குறள் 1056:
கரப்பிடும்பை யில்லாரைக்
காணின் நிரப்பிடும்பை
யெல்லா மொருங்கு கெடும்
யெல்லா மொருங்கு கெடும்
மு.வ உரை:
உள்ளதை ஒளிக்கும்
துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத்
துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.
சாலமன் பாப்பையா உரை:
இருப்பதை மறைப்பதாகிய நோய்
இல்லாதவரைக் கண்டால், இல்லாமையாகிய நோய் எல்லாம்
மொத்தமாக அழியும்.
கலைஞர் உரை:
இருப்பதைக் கொடுக்க
மனமின்றி மறைத்திடும் இழிநிலை இல்லாதவர்களைக் கண்டாலே, இரப்போரின் வறுமைத் துன்பம் அகன்று விடும்
குறள் 1057:
இகழ்ந்தெள்ளா தீவாரைக்
காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்ப துடைத்து
உள்ளுள் உவப்ப துடைத்து
மு.வ உரை:
இகழ்ந்து எள்ளாமல் பொருள்
கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம்
மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை அடையும் தன்மையுடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அவமதிக்காமல், இழிவாகப் பேசாமல் எடுத்துக் கொடுப்பவரைக்
கண்டால், பிச்சை கேட்பவரின் மனம்
மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை கொள்ளும்.
கலைஞர் உரை:
இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை
உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம்
மகிழ்ச்சியால் இன்பமுறும்
குறள் 1058:
இரப்பாரை யில்லாயின்
ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று
மரப்பாவை சென்றுவந் தற்று
மு.வ உரை:
இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த
பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பிச்சை ஏற்பார் என்பவர்
இல்லாது போய் விட்டால், குளி்ர்ந்த பெரிய
இவ்வுலகத்தில் வாழ்பவரின் வாழ்க்கை, வெறும்
மரப்பொம்மைகளின் போக்குவரத்தாகவே ஆகிவிடும்.
கலைஞர் உரை:
வறுமையின் காரணமாக
யாசிப்பவர்கள், தம்மை நெருங்கக் கூடாது
என்கிற மனிதர்களுக்கும், மரத்தால் செய்யப்பட்டு
இயக்கப்படும் பதுமைகளுக்கும் வேறுபாடே இல்லை
குறள் 1059:
ஈவார்கண் என்னுண்டாம்
தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை
மேவார் இலாஅக் கடை
மு.வ உரை:
பொருள் இல்லை என்று இரந்து
அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள்
கொடுப்பவனிடத்தில் என்ன புகழ் உண்டாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தம்மிடம் வந்து ஒன்றைப்
பிச்சையாகக் கேட்பவர் இல்லாதபொழுது, கொடுக்கும்
மனம் உள்ளவர்க்குப் புகழ் ஏது?
கலைஞர் உரை:
இரந்து பொருள் பெறுபவர்
இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப் புகழ்
பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும்
குறள் 1060:
இரப்பான் வெகுளாமை
வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி
தானேயும் சாலும் கரி
மு.வ உரை:
இரப்பவன் எவரிடத்திலும்
சினம் கொள்ளாதிருக்க வேண்டும், அவன் அடைந்துள்ள வறுமைத்
துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும்.
சாலமன் பாப்பையா உரை:
பிச்சை ஏற்பவன் அது
கிடைக்காதபோது கோபங்கொள்ளக்கூடாது; வேண்டும்பொழுது
பொருள் கிடைக்காது என்பதற்கு அவனுக்கு ஏற்பட்டுள்ள துன்பமே போதுமான சான்றாகும்.
கலைஞர் உரை:
இல்லை என்பவரிடம், இரப்பவன் கோபம் கொள்ளக்கூடாது தன்னைப் போலவே
பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்குத் தன் வறுமையே சான்றாக இருக்கிறதே
0 Comments