இன்மையின் இன்னாத
தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது
இன்மையே இன்னா தது
மு.வ உரை:
வறுமையைப் போல் துன்பமானது
எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது
வறுமை ஒன்றே ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
இன்மையை விடக் கொடியதுஎது
என்றால், இல்லாமையை விடக் கொடியது
இல்லாமையே.
கலைஞர் உரை:
வறுமைத் துன்பத்துக்கு
உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை
குறள் 1042:
இன்மை எனவொரு பாவி
மறுமையும்
இம்மையும் இன்றி வரும்
இம்மையும் இன்றி வரும்
மு.வ உரை:
வறுமை என்று சொல்லப்படும்
பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை
வரும்.
சாலமன் பாப்பையா உரை:
இல்லாமை என்ற ஒரு பாவி
ஒருவனிடத்தில் சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க
இல்லாதவன் ஆவதால் அவனுக்கு மறுமை இன்பமும் இல்லை; தானே
அனுபவிக்க ஏதும் இல்லாததால் இம்மை இன்பமும் இல்லை.
கலைஞர் உரை:
பாவி என இகழப்படுகின்ற
வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது
குறள் 1043:
தொல்வரவும் தோலும்
கெடுக்கும் தொகையாக
நல்குர வென்னும் நசை
நல்குர வென்னும் நசை
மு.வ உரை:
வறுமை என்று சொல்லப்படும்
ஆசைநிலை ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழைமையானக் குடிப்
பண்பையும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
இல்லாமை என்று
சொல்லப்படும் மன ஆசை எவரிடம் இருக்கிறதோ, அவரின்
பழம் குடும்பப் பெருமையையும் சிறந்த பாராட்டுக்களையும் அது மொத்தமாக அழித்து
விடும்.
கலைஞர் உரை:
ஒருவனுக்கு வறுமையின்
காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப்
பெருமையையும், புகழையும் ஒரு சேரக்
கெடுத்துவிடும்
குறள் 1044:
இற்பிறந்தார் கண்ணேயும்
இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்
சொற்பிறக்கும் சோர்வு தரும்
மு.வ உரை:
வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு
தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்தில்
பிறந்தவரிடம் கூட, இல்லாமை வந்து விட்டால், இழிவான சொற்களைச் சொல்லும் தளர்ச்சியை
உண்டாக்கி விடும்.
கலைஞர் உரை:
இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல்
பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும்
குறள் 1045:
நல்குர வென்னும்
இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்
துன்பங்கள் சென்று படும்
மு.வ உரை:
வறுமை என்று சொல்லப்படும்
துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று
விளைந்திடும்.
சாலமன் பாப்பையா உரை:
இல்லாமை என்னும்
துன்பத்திற்குள் எல்லா வகைத் துன்பங்களும் அடங்கும்.
கலைஞர் உரை:
வறுமையெனும்
துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்
குறள் 1046:
நற்பொருள் நன்குணர்ந்து
சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்
சொற்பொருள் சோர்வு படும்
மு.வ உரை:
நல்ல நூற் பொருளை நன்றாக
உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல்
பயன்படாமல் போகும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல கருத்துக்களைத்
தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால்
அவர் சொல் மதிக்கப் பெறாது.
கலைஞர் உரை:
அரிய பல் நூல்களின்
கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச்
சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும்
குறள் 1047:
அறஞ்சாரா நல்குர வீன்றதா
யானும்
பிறன்போல நோக்கப் படும்
பிறன்போல நோக்கப் படும்
மு.வ உரை:
அறத்தோடு பொருந்தாத வறுமை
ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப்
பார்க்கப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை:
நியாயமான காரணங்கள் இல்லாத
இல்லாமை ஒருவனுக்கு இருந்தால், பெற்ற தாய் கூட அவனை
அந்நியனாகவே பார்ப்பாள்.
கலைஞர் உரை:
வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள்
குறள் 1048:
இன்றும் வருவது கொல்லோ
நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு
கொன்றது போலும் நிரப்பு
மு.வ உரை:
நேற்றும் கொலை செய்தது போல்
துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று
வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).
சாலமன் பாப்பையா உரை:
நேற்று என்னைக் கொன்றது
போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?
கலைஞர் உரை:
கொலை செய்வதுபோல நேற்றுக்
கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும்
வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்
குறள் 1049:
நெருப்பினுள் துஞ்சலும்
ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பா டரிது
யாதொன்றும் கண்பா டரிது
மு.வ உரை:
ஒருவன் நெருப்பினுள்
இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில்
எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.
சாலமன் பாப்பையா உரை:
யோக வலிமையால்
நெருப்பிற்குள் படுத்து உறங்கவும் முடியும்; ஆனால், பசிக் கொடுமைக்குள் சிறிது கூடக் கண் மூட
முடியாது.
கலைஞர் உரை:
நெருப்புக்குள் படுத்துக்
தூங்குவதைகூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால்
வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும்
குறள் 1050:
துப்புர வில்லார் துவரத்
துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று
உப்பிற்கும் காடிக்கும் கூற்று
மு.வ உரை:
நுகரும் பொருள் இல்லாத
வறியவர் முற்றுந் துறக்க கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே
ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
உண்ண, உடுத்த ஏதம் இல்லாதவர் இல்லறத்தை முழுமையாகத்
துறந்து விடாதிருப்பது, பிறர் வீட்டில் இருக்கும்
உப்புக்கும் கஞ்சித் தண்ணீருக்கும் எமனாம்.
கலைஞர் உரை:
ஒழுங்குமறையற்றதால்
வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத்
துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான்
கேடு
0 Comments