கருமத்தால் நாணுதல் நாணுத்
திருநுதல்
நல்லவர் நாணுப் பிற
நல்லவர் நாணுப் பிற
மு.வ உரை:
தகாத செயல் காரணமாக
நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற
நாணங்கள் வேறு வகையானவை.
சாலமன் பாப்பையா உரை:
இழிவான செயல்களுக்கு
வெட்கப்படுவதே அனைவர்க்கும் பொதுவான நாணம்; மற்றொன்று
அழகிய நெற்றி கொண்ட பெண்களின் இயல்பான வெட்கம் ஆகும்.
கலைஞர் உரை:
ஒருவர் தமது தகாத
நடத்தையின் காரணமாக நாணுவதற்கும், நல்ல பெண்களுக்கு இயல்பாக
ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு
குறள் 1012:
ஊணுடை எச்சம்
உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு
நாணுடைமை மாந்தர் சிறப்பு
மு.வ உரை:
உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது
நாணுடைமையே ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
உணவு, உடை இன்னும் பிற சிறப்புகள், எல்லா மனிதர்க்கும் ஒன்றே; நல்ல மனிதர்க்குச் சிறப்பாவது நாண் உடைமையே.
கலைஞர் உரை:
உணவு, உடை போன்ற அனைத்தும் எல்லோருக்கும் பொதுவான
தேவைகளாக அமைகின்றன; ஆனால் சிறப்புக்குரிய
தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும்
செயல்களைத் தவிர்த்து வாழும் நாணுடைமைதான்
குறள் 1013:
ஊனைக் குறித்த உயிரெல்லாம்
நாணென்னும்
நன்மை குறித்தது சால்பு
நன்மை குறித்தது சால்பு
மு.வ உரை:
எல்லா உயிர்களும் ஊனாலாகிய
உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று
சொல்லப்படும் நல்லப் பண்பை இருப்பிடமாகக் கொண்டது.
சாலமன் பாப்பையா உரை:
எல்லா உயிர்களும் உடம்பை
இடமாகக் கொண்டுள்ளன; அதுபோல், சான்றாண்மையும், நாணம் என்னும் நல்ல குணத்தை இடமாகக்
கொண்டுள்ளது.
கலைஞர் உரை:
உடலுடன் இணைந்தே உயிர்
இருப்பது போல், மாண்பு என்பது நாண
உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்
குறள் 1014:
அணியன்றோ நாணுடைமை
சான்றோர்க் கஃதின்றேற்
பிணியன்றோ பீடு நடை
பிணியன்றோ பீடு நடை
மு.வ உரை:
சான்றோர்க்கு நாணுடைமை
அணிகலம் அன்றோ, அந்த அணிகலம் இல்லையானால்
பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ.
சாலமன் பாப்பையா உரை:
நாணம் இருப்பது
சான்றோர்க்கு ஆபரணம்; அது மட்டும் இல்லை
என்றால் அவர்கள் நடக்கும் பெருமித நடை பார்ப்பவர்க்கு நோயாம்.
கலைஞர் உரை:
நடந்த தவறு காரணமாகத்
தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு
அணிகலன் ஆக விளங்கும் அந்த அணிகலன் இல்லாமல் என்னதான் பெருமிதமாக நடைபோட்டாலும், அந்த நடையை ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத
முடியும்
குறள் 1015:
பிறர்பழியும் தம்பழியும்
நாணுவார் நாணுக்
குறைபதி என்னும் உலகு
குறைபதி என்னும் உலகு
மு.வ உரை:
பிறர்க்கு வரும்
பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும்
நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும்.
சாலமன் பாப்பையா உரை:
தமக்கு வரும் பழிக்கு
மட்டும் அன்றி, பிறர்க்கு வரும் பழிக்கும்
வெட்கப்படுவோர், நாணம் வாழும் இடம் என்று
உலகத்தவர் கூறுவர்.
கலைஞர் உரை:
தமக்கு வரும் பழிக்காக
மட்டுமின்றிப் பிறர்க்கு வரும் பழிக்காகவும் வருந்தி நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான உறைவிடமாவார்
குறள் 1016:
நாண்வேலி கொள்ளாது மன்னோ
வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்
பேணலர் மேலா யவர்
மு.வ உரை:
நாணமாகிய வேலியை தமக்கு
காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில்
வாழும் வாழ்க்கை விரும்பி மேற்கொள்ள மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
பெரியவர்கள் தனக்குப்
பாதுகாப்பாக நாணத்தைக் கொள்வாரே அல்லாமல், இந்தப்
பெரிய உலகத்தைக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.
கலைஞர் உரை:
பரந்த இந்த உலகில்
பாதுகாப்பையும்விட, நாணம் எனும் வேலியைத்தான்
உயர்ந்த மனிதர்கள், தங்களின் பாதுகாப்பாகக்
கொள்வார்கள்
குறள் 1017:
நாணால் உயிரைத் துறப்பர்
உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்
நாண்துறவார் நாணாள் பவர்
மு.வ உரை:
நாணத்தை தமக்கரிய பண்பாகக்
கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும்
பொருட்டாக நாணத்தை விட மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
நாணத்தின் சிறப்பை அறிந்து
அதன் வழி நடப்பவர் நாணமா, உயிரா,என்ற நெருக்கடி வரும்போது உயிரையே விடுவர்; உயிரைக் காக்க நாணத்தை விடமாட்டார்.
கலைஞர் உரை:
நாண உணர்வுடையவர்கள், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும்
விடுவார்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள்
குறள் 1018:
பிறர்நாணத் தக்கது தானாணா
னாயின்
அறநாணத் தக்க துடைத்து
அறநாணத் தக்க துடைத்து
மு.வ உரை:
ஒருவன் மற்றவர் நாணத்தக்க
பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மற்றவர் வெட்கப்படும்
ஒன்றிற்கு ஒருவன் வெட்கப்படாமல் அதைச் செய்வான் என்றால், அறம் வெட்கப்படும் குற்றம் அவனிடம் இருக்கிறது.
கலைஞர் உரை:
வெட்கப்படவேண்டிய
அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு
அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும்
குறள் 1019:
குலஞ்சுடும் கொள்கை
பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை
நாணின்மை நின்றக் கடை
மு.வ உரை:
ஒருவன் கொள்கை தவறினால் , அத் தவறு அவனுடையக் குடிப் பிறப்பைத்
கெடுக்கும், நாணில்லாத தன்மை நிலைப்
பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் ஒழுக்கம் கெட்டால்
அவன் குடும்பப் பிறப்பு கெடும்; அவனே நாணம் இல்லாது
நின்றால் அவன் நலம் எல்லாம் கெடும்.
கலைஞர் உரை:
கொண்ட கொள்கையில் தவறினால்
குலத்துக்கு இழுக்கு நேரும் அதற்கு நாணாமல் பிறர் பழிக்கும் செயல் புரிந்தால்
நலமனைத்தும் கெடும்
குறள் 1020:
நாணகத் தில்லார் இயக்கம்
மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று
நாணால் உயிர்மருட்டி அற்று
மு.வ உரை:
மனத்தில் நாணம் இல்லாதவர்
உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக்
கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
மனத்துள் வெட்கம்
இல்லாதவர்களின் நடமாட்டம், மரத்தால் செய்த
பொம்மைக்கு உயிர் ஊட்டியிருப்பதாகக் காட்டி மயக்கியது போலாம்.
கலைஞர் உரை:
உயிர் இருப்பது போலக்
கயிறுகொண்டு ஆட்டி வைக்கப்படும் மரப்பொம்மைக்கும், மனத்தில்
நாணமெனும் ஓர் உணர்வு இல்லாமல் உலகில் நடமாடுபவருக்கும் வேறுபாடு இல்லை
0 Comments